புதன், 15 ஏப்ரல், 2009
எல்லாப் பெண்களுக்கும் ஒரு அழகுண்டு என்றிருந்தேன்...
உன்னைப் பார்க்கும் வரை...
எல்லா அழகுகளும் உள்ள பெண்ணும் உண்டு என்றறிந்தேன்...
உன்னைப் பார்த்தவுடன்......
காதலும் கண்களும்
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்!
உன் கண்கள் இல்லாமல் காதல் இல்லை என்பேன் நான்!
முத்தப் போட்டியின் முடிவில்...
நமக்கிடையே நடக்கும் முத்தப் போட்டிகளின்
முடிவில் எப்போதும் வெல்கிறது காதல்..
அவள் இல்லாத அதே இடம்..
கரையில் நான்,
குளத்தில் கல்,
கலங்கியது .... என் மனம்.
சம்மதம்...
அம்மாவும்.. அப்பாவும்.. முதன்முறையாக சம்மதம் சொன்னார்கள் திருமணமன்றத்தில்,
ஆறு வருடங்களுக்குப் பின் இப்போது அடுத்த முறை சொலவது.... நீதி மன்றத்தில் தான்...
நேட்சரும் சயின்சும்....
கல்லூரியில் ஏற்பட்டது நமது பரிச்சயம்,
அதன்பின்.. சரியாக எழுதவில்லை நான் ஒரு பரிட்சையும்...
நீ படிப்பது குவான்டம், அலைவரிசை அறிவியல்
நான் கற்பதோ கவிதை, கதை, கரும்புத் தமிழ்
உன் விருப்பம் இயற்பியலில் ராணி ஆக வேண்டுமென்பது...
இந்நாட்டு ராஜா யார் என்பதே எனக்குத் தேவை இல்லாதது...
நான் எழுதியதோ உனக்கு வழவழா கவிதை..
என்னைப் பொறுத்தவரை... அதுவே நான் போட்ட முதல் வாழ்க்கை விதை....
நேட்சரும் சயின்ஸும் ஒண்ணா சேரும்போது....
நாம ஏன் ஒண்ணா சேரக் கூடாது ..?
1 Comment:
-
- senthilkumar subramanian said...
1 ஜூன், 2009 அன்று 7:21 AManna kalakureenga....great
