புதன், 6 ஏப்ரல், 2011

என்னவள்.


என்னை பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவள்

செவ்வாய், 30 ஜூன், 2009

எந்நேரமும் காதல்....

உன்னோடு இருந்த காலம்
இறந்த காலம் அல்ல..
நான் வாழ்ந்த காலம்.

நீயின்றி
இது நிகழ்காலம் அல்ல
எதுவும் நிகழாக் காலம்..

உன்னை எதிர்பார்த்தே
இருப்பதே எனக்கு
எதிர்காலம்...

செவ்வாய், 2 ஜூன், 2009

கோஷ்டிப் பாசம்..

எந்தக் கோஷ்டியும் இல்லை.. நான் நாத்திகன் என்றேன்..
ஓ.. நீ அந்த கோஷ்டியா..? என்கிறான் நண்பன்.

வேற்றுமையில் ஒற்றுமை..

எங்க ஏரியா உங்க ஏரியா,
எங்க ஊரு உங்க ஊரு,
என் ஜாதி உன் ஜாதி,
என் மதம் உன் மதம்,
என் இனம் உன் இனம்,

வேற்றுமையில் மட்டுமே..
இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.

திங்கள், 4 மே, 2009

வேலையில் சேர வெளியூர்ப் பயணம்
முன்னே செல்லும் ரயில்
ஜன்னலோரத்தில் நான்
பின்னே செல்லும் நினைவுகள்..

சிகரெட்..
பற்றவைத்து இழுக்க இழுக்கக் குறையுது...... ஆயுசு

பன்றிக் காய்ச்சல்...
கைகுலுக்கினால் பரவலாம்.. கைகூப்பி வணங்கினால் பரவாது.

நீ இன்றி அமையாதென் உலகு...

சூரிய உதயத்தில் கால் தொடும் கடல் அலை,
தூரத்தில் தெரியும் மழைக்கால வானவில்,
காற்றில் வரும் புல்லாங்குழல் இசை,
அந்தி மாலையில் மழையின் மண்வாசனை,
இவற்றையெல்லாம் நான் ரசிபபதில்லை...
நீ என்னருகில் இல்லாத சமயங்களில்...

அயல்நாட்டில் ஆன்சைட் பணி...
"மணி 8... எழுந்திரு" அலாரம் அழைத்தது...
"பில்லை செலுத்தவும்" குறுஞ்செய்தி வந்தது.
"ஃபைல் அனுப்பு" மேலாளரின் மெயில் காட்டியது.
"உங்கள் கணக்கில்.." பதிவு செய்த குரல் கூறியது.
"Are you sure?" கணிப்பொறி கேட்டது.
"Second Floor" லிஃபட் சொன்னது.
"அப்பா, எப்ப வருவீங்க?" கனவில் என் குழந்தை!

கங்கை கொண்ட பாவங்கள்..
"இனி பண்ணப் போற பாவத்துக்கும் சேர்த்துக் குளி"
- கங்கையில் குளிக்கும் சிறுவனிடம் தாத்தா.

இனிப்பு
எவரிடமும் இனிமையாக பேசாதவருக்கு வந்தது.....சக்கரைவியாதி.

புதன், 22 ஏப்ரல், 2009

ஒரு இலங்கைத் தமிழனின் இறுதி வார்த்தைகள்...

நான் தமிழனும் இல்லை, சிங்களனும் இல்லை,

மனிதாபிமானம் மறுக்கப்பட்ட மனிதன்..

உங்கள் மௌனம்... எங்கள் மரணம்....

இலங்கையிலிருந்து நன்றி....

எங்கள் சாவுக்கு முன்னரே

மௌன அஞ்சலி செலுத்தும்..

சகோதரர்களுக்கு நன்றி...

அரசியல்வாதிகள்

தேசத்தை வழி நடத்த வேண்டியவர்கள்,
நன்றாகவே நடத்துகிறார்கள் சேதத்தை...

புதன், 15 ஏப்ரல், 2009

அவளுக்கு நான் அழகு!

எல்லாப் பெண்களுக்கும் ஒரு அழகுண்டு என்றிருந்தேன்...

உன்னைப் பார்க்கும் வரை...

எல்லா அழகுகளும் உள்ள பெண்ணும் உண்டு என்றறிந்தேன்...

உன்னைப் பார்த்தவுடன்......

காதலும் கண்களும்

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்!

உன் கண்கள் இல்லாமல் காதல் இல்லை என்பேன் நான்!

முத்தப் போட்டியின் முடிவில்...

நமக்கிடையே நடக்கும் முத்தப் போட்டிகளின்

முடிவில் எப்போதும் வெல்கிறது காதல்..

அவள் இல்லாத அதே இடம்..

கரையில் நான்,

குளத்தில் கல்,

கலங்கியது .... என் மனம்.

சம்மதம்...

அம்மாவும்.. அப்பாவும்.. முதன்முறையாக சம்மதம் சொன்னார்கள் திருமணமன்றத்தில்,

ஆறு வருடங்களுக்குப் பின் இப்போது அடுத்த முறை சொலவது.... நீதி மன்றத்தில் தான்...


நேட்சரும் சயின்சும்....


கல்லூரியில் ஏற்பட்டது நமது பரிச்சயம்,
அதன்பின்.. சரியாக எழுதவில்லை நான் ஒரு பரிட்சையும்...

நீ படிப்பது குவான்டம், அலைவரிசை அறிவியல்
நான் கற்பதோ கவிதை, கதை, கரும்புத் தமிழ்

உன் விருப்பம் இயற்பியலில் ராணி ஆக வேண்டுமென்பது...
இந்நாட்டு ராஜா யார் என்பதே எனக்குத் தேவை இல்லாதது...

நான் எழுதியதோ உனக்கு வழவழா கவிதை..
என்னைப் பொறுத்தவரை... அதுவே நான் போட்ட முதல் வாழ்க்கை விதை....

நேட்சரும் சயின்ஸும் ஒண்ணா சேரும்போது....

நாம ஏன் ஒண்ணா சேரக் கூடாது ..?

திங்கள், 6 ஏப்ரல், 2009

மதுரை....
வீரம் வெளஞ்ச மண்ணு ...எங்க தலையில....

புகைப்பழக்கம்
நிறுத்த முடிவு செய்து 10 நாட்கள் நிறுத்தினேன்...
நிறுத்த முடியும் என்று 11ம் நாள் மீண்டும் தொடங்கினேன்....

மூட்டு வலி
அலையாய் அலைந்தாலும்.... அமர்ந்த பின் தான் தெரியும்....!

என் கவலை
கறுத்திருப்பதனால் அல்ல...
கருத்து இல்லாமல் இருப்பதனால்...

ஹாப்பி நியூஇயர்....!
நாராசமாய் கத்தியவனை நறுக்கென்று கடித்த நாய்க்கு தெரியுமா?